அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் பெட்டிக்கடை ஒன்றை நிர்வாகம் செய்ய பொருத்தமானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளினால் மக்கள் மீது தேவையற்ற சுமைகள் திணிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலைமை தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
மக்கள் மீது வரிச் சுமையை திணித்த இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், இதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டு மக்களின் வரிச்சுமை பாரியளவில் அதிகரித்துள்ளது.வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் முற்று முழுதாக பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.