அரசியலமைப்புச் சட்டத்திற்கு  யோசனை முன்வைப்பு

289

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற பிரதமர், அங்கு அஸ்கிரிய மாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து மல்வத்து மஹா விகாரைக்கு சென்ற பிரதமர், மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளில், உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் வகையில் மாநாயக்க தேரர்கள் சில யோசனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE