
அரசியலமைப்புச் சபை பிரதிநிதிகள் கூடுவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபையின் பிரதிநிதிகள் இந்தப் பணிக்காக ஒன்று கூடுவது தொடர்பிலேயே தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு புறம்பான வகையில் இந்த உறுப்பினர்கள் கூடி ஆராய்வதற்கும் அதற்காக கொடுப்பனவு ஒன்றை வழங்கவும் முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் யோசனையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதனால் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்வுகளில் இணைத்து கொள்வது தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களை வரையறுப்பது குறித்த யோசனை ஒன்று முன்வைக்;கப்பட்ட போதிலும் அந்த யோசனை கட்சித் தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினத்தில் காலையில், அரசியலமைப்புச் சபை பிரதிநிதிகள் கூடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் அந்த யோசனையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அரசியல்மைப்புச் சபையின் உப குழுக்களுக்கு இன்னமும் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை
மே மாதம் முதல் தொடர்ச்சியாக அரசியலமைப்புச் சபை கூட்டங்களை நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த அமர்வுகளை நடாத்துவதில் தற்போது சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.