அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிந்து வந்த ஆணைக்குழு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவினர் இன்று பிரதமரை சந்தித்து பொதுமக்களின் பரிந்துரைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஆணைக்குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு தமது பணிகள் குறித்து அறிவிக்கவுள்ளனர்.
நேற்று குறித்த குழுவினர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனை சந்தித்து அவரின் ஆலோசனைகளை கேட்டறிந்து கொண்டனர்.
அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன