சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அரச துறைக்கான நியமனங்களை வழங்கும் அரசியலமைப்பு சபை கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாகியுள்ள அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என தெரியவருகிறது.
அரசியலமைப்பு சபை, 10 பேரை கொண்டது. அதில் 7 பேர் நியமன உறுப்பினர்களாகவும், 3 பேர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் பிரதிநிதிகளாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் நியமன உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பிரதிநிதிகளின் 3 வருட காலம் முடிந்துள்ளமையால் அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரம் தமது பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை நியமித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை அரசியலமைப்பு சபையை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.