அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதி -குமார வெல்கம.

198

அரசியலமைப்பிற்கு  முரனாக  செயற்பட்ட ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனநாயகத்தை   மதிப்பார்  என்பது  சந்தேகத்திற்கிடமானது.  இவர்  தொடர்ந்து  ஜனாதிபதி  பதவியை வகிக்க  தகுதியற்றவர்.  ஆகவே  ஜனாதிபதி   தேர்தலே முதலில்  இடம் பெற  வேண்டும் என்று    பாராளுமன்ற உறுப்பினர் குமார  வெல்கம தெரிவித்தார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பினையும், பொதுச்சட்டத்தினையும் முதலில் ஜனாதிபதி  மதிக்க வேண்டும்.  நாட்டு  தலைவரை பின்பற்றியே  நாட்டு  மக்கள் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.  சாதாரண பிரஜை  ஒருவர் அரசியலமைப்பிற்கு  முரனாக  செயற்படும் பொழுது அவர்  சட்டத்தால்  தண்டிக்கப்படுகின்றார்.   சட்டவாட்சி கோட்பாட்டை  ஜனாதிபதியும்  மதிக்க வேண்டும். அவர் மாத்திரம்  விதிவிலக்கல்ல.

அரசியல் நெருக்கடியின் காரணமாக நாட்டில்  இடம் பெற்ற    பொருளாதார நெருக்கடிகளுக்கு  யார் தற்போது  பொறுப்பு கூறுவார்கள்.  இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்ற வேண்டிய அவசியம்  கிடையாது.  ஏனெனில் ஜனாதிபதியே அவரது விருப்பத்தின் ஊடாக இடைக்கால அரசாங்கத்தை  மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏற்படுத்தினார். ஆகவே    இவற்றிற்கு ஜனாதிபதியே  பொறுப்பு   கூற வேண்டும்.  அதற்கு  முன்னர் அவர் சுய  விருப்பின் பெயரில்  பதவி  விலக வேண்டும் . அல்லது  ஜனாதிபதி தேர்தரை  நடத்த  முயற்சிக்க வேண்டும்  என்றார்.

SHARE