அஜித் அரசியல் எனக்கு செட்டாகாது என ஏற்கனவே கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அப்போதைய முதலமைச்சர்களையே தைரியமாக எதிர்த்து பேசியவர் என்ற பெருமையை பெற்றார்.
அவரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் கூட பல நடந்தன. ஆனால் அவர் எதற்கும் அசையவில்லை. ரசிகர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட அவர் மன்றத்தையே நீக்கிவிட்டார்.
ஆனால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் தானாக முன்வந்து குளங்களை தூர் வாரும் சமூக பணியில் இறங்கியுள்ளார்கள்.
இதை நடிகர் விவேக்கும் வாழ்த்தியுள்ளார்.
https://twitter.com/Freeky_Boy143/status/1052198621737709568