
நாடாளுமன்றை பிரதிநிதி;த்துவம் செய்யும் மற்றும் முக்கியமான அரசியல்வாதிகளின் பெயர்களில் இவ்வாறு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அனுமதிப்பத்திரங்களில் 13 அனுமதிப்பத்திரங்கள் குருணாகல் மாவட்ட அரசியல்வாதிகளினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு முதல் இதுவரையில் அரசாங்கங்கள் 1098 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது அநேகமாக அரசியல் சிபாரிசுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி உண்மையிலேயே 45 மதுபானசாலைகளுக்கு மேலதிகமாக பெரும் எண்ணிக்கையிலான மதுபான சாலைகளுக்கும் அரசியல்வாதிகளு;கும் இடையில் மறைமுகத் தொடர்பு காணப்படுவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் பற்றிய விபரங்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.