அரசியல் காரணங்களுக்காகவே தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடிவி்ல்லை -CV யிடம் MY3

334
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே அதனை செய்ய முடியவில்லை என ஜனாதிபதி கூறியதாக சுவிஸ் தூதுவரிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன் வால்கர் நிடேர்கூர்ன் உள்ளடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டு இருந்தனர்.
அக் குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர். அச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகள் மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கோர முடியாத என கேட்டனர். என்ன அடிப்படையில் அவர்களிடம் உண்ணாவிரத்தை கைவிட கோர முடியும் ? முடிவு என்ற ஒன்று இல்லாமல் எவ்வாறு அவர்களிடம் கோர முடியும்.
உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளில் 23 பேரின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது, அதில் 9 பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். எனவும் எடுத்து கூறினேன்.
மக்கள் தங்களை எதிர்ப்பை அஹிம்சை ரீதியாகவே முன்னெடுக்கின்றார்கள் அதற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் தங்களை தாங்களே வருத்திக்கொண்டவர்களாக இருக்கும்.என அவர்களிடம் கூறினேன்.
அரசியல் ரீதியாக உதவ தயாராக இருப்பதாகவும் ,புதிய அரசியல் யாப்பை உருவாக்க உதவிகளை செய்ய உள்ளதாகவும் சுவிஸ் தூதுவர் தன்னிடம் தெரிவித்தாக முதலமைச்சர் தெரிவித்தார்.
SHARE