அரசியல் கைதிகளது சிறுநீரகங்கள் செயலிழப்பு…? கூட்டமைப்பார் தலை மறைவு.

443

 

அரசியல் கைதிகள் மருத்துவ வசதிகளை ஏற்க மறுத்துள்ள நிலையினில் அவர்களது சிறுநீரககங்கள் செயலிழக்க தொடங்கியிருப்பதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.இன்று சனிக்கிழமை காலை முதல் மருத்துவ சிகிச்சை வசதிகளை அரசியல் கைதிகள் மறுதலித்துள்ள நிலையினில் அவர்கள் சிறுநீரககங்கள் செயலிழக்க தொடங்கியிருப்பதாக மேலும் தெரியவருகின்றது.

jail

பெரும்பாலான கைதிகள் திங்கட்கிழமை ஜனாதிபதியினது பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரியவருகின்றது.

இதனிடையே அனுராதபுரம் சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 66 வயதுடைய அரசியல் கைதியொருவர் உடல்நிலை மோசமடைந்த நிலையினில் சிறைச்சாலை வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பார் தலைமறைவான நிலையில் உள்ளதாக கூறுப்படுகிறது கைதிகள் இறந்தால் அவர்களுக்கு குதுாகல அரசியல் என்னதான் நடக்குது.

SHARE