தமிழர் பாரம்பரிய வராலாற்றில் கொண்டாடப்படும் தீபத்திருநாளான தீபாவளித் திருநாளினை தமிழர்கள் நாம் கொண்டாடினாலும், தொடர்ந்து எமது அரசியல் கைதிகளும், முன்னாள் போராளிகளும், காணமல் போனோரின் விடுதலையும் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ள இந்த காலகட்டத்தில் எமது துயர் துடைக்க குரல் கொடுத்தவர்களின் குடும்பங்கள் இருளில் வாழ நாம் தீபத்திருநாள் கொண்டாடுகிறோம்.
எமது அரசியல் கைதிகளின் ஒட்டு மொத்த விடுதலையே எமது இளைஞர் கழகத்தின் தீபத் திருநாள், என்று அரசியல் கைதிகளின் குடும்பங்களில் ஒளி பிறக்குமோ? அன்றே எமது தீபத்திருநாள்.
அரசியல் கைதிகளினதும், காணமல் போனோரின் குடும்பங்களின் சமையலறையில் ஒரு நேர நெருப்பு கூட எரியமுடியாமல் தத்தளிக்கும் காலத்தில், எமது இல்லங்களில் தீபத்திருநாள் கொண்டாடுவது எமது கழகத்தை பொறுத்தமட்டில் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. எனவே நாம் தொடர்ந்து அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி போராடுவோம்.
எதிர்வரும் 13ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூரண ஹர்த்தாலுக்கு இளைஞர்கள் ஆகிய நாமும் பூரண ஆதரவினை தெரிவிப்பதோடு, அகதிகளின், காணமல் போனோரின் விடுதலையை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் இதுவே எமது தீபத்திருநாள் செய்தி.