அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் வருகைத்தந்திருந்தார்.
அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து யாரும் வரவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல அரசியல்வாதிகள் பல கருத்துக்களை முன்வைத்ததோடு, பல உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தனர். ஆனால் இன்று அது பற்றி எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவுமில்லை, யாரும் வருகைத்தரவுமில்லையென சுட்டிக்காட்டினார்.
அதேவேளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அரசியல் கைதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலும் வடமாகாண ஆளுநர் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகள் தொடர்பாக இன்று முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார்” என கூறியுள்ளார்.
தொடர்ந்து 15 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் எழுந்து நடக்கக்கூட முடியாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அரசியல் கைதிகள் தொடர்பான விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.