அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தாமதம் சுமந்திரனின் பின்னணியே!

320

 

கடந்த வாரங்களாக தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வேண்டி உண்ணாவிரதம் இருந்துவரும் அதே நேரம் கடந்த 07.11.2015 திகதி கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்த நிலையிலும் 24 பேர் கண்துடைப்பாக விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனையவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதன் பின்னணியில் சுமந்திரன் அவர்கள் செயற்பட்டதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

15

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுமந்திரன் இருவரும் கைதிகள் விடுதலை நடக்கவிருந்த சமயத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு சுமந்திரன் அவர்கள் கைதிகள் விடுதலை தொடர்பிலும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தொடர்பிலும், இனப்படுகொலை தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்ததன் காரணமாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களது செயற்பாடுகள் அமையப்பெற்றிருக்கின்றன என்பதேயாகும்.
இவ் விவகாரம் தொடர்பில் சுமந்திரன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும் அவர் எந்தவித பதிலையும் இலங்கை ஊடகங்களுக்கு இதுவரை வழங்கவில்லை. ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்பது போல் சுமந்திரனுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE