அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரே விடுவிக்கப்படுவார்கள் – யாழில் அமைச்சர் விஜயதாஸ:

314

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாகவும், ஏனையவர்களை விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிப்பட்டார். அதனை தொடர்ந்து, யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

SHARE