அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.