இன்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன்,
எந்தவிதமான விசாரணைகளும் இன்றி தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் குற்றவாளிகள் மட்டுமே சிறையில் இருப்பதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், நமது தமிழ் அரசியல் கைதிகளை தீவிரவாதிகள் என்று கூற யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை பிற நாட்டு சிறைக்கைதிகள் பற்றி நாம் கூறும் போது எங்களை அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான கருத்துக்களையும் இங்கே காணலாம்.
தொடர்புடைய செய்திகள்