அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வீதியில் இறங்கிய மக்கள்

266

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சம உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னாள் ஜனாதிபதி மாளிகை வரையில் நடைபயணமாக சென்றனர்.

இதில் கலந்துகொண்ட சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதியின் செயலாளரை சந்திப்பதற்காதன அனுமதியை பொலிஸார் வழங்கியிருந்தனர்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பல வருடங்களாக குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலைசெய்யுமாறு அவர்களது குடும்பத்தவர்களும், சிவில் சமூகத்தினரும் இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்புகோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போதே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களான பின்னரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பல சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளிற்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
300 சிறுபான்மை தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்,ஆனால் அவர்கள் யுத்தத்திற்கு காரணமானவர்கள் அல்ல,மாறாக அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என சமஉரிமைகளிற்கான உரிமைகள் இயக்கத்தின் பேச்சாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார்.
2009 ஆண்டு யுத்தம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களிற்கு முன்னர் தனது கணவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்த 50 வயதான நூர்தம்மா இமானுவேல் அவர் இன்னமும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதால் தனது குடும்பம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை விடுதலைசெய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

SHARE