அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைத்து இருக்கின்றார்கள் தவிர, வேறு காரணங்கள் இல்லை. அதனால் அவர்கள் விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியாகவே தீர்மானம் எடுக்க வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதி அமைச்சர் கூறியது தொடர்பில் முதலமைச்சரிடம் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சட்டமா அதிபர் தான் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கின்றார். என கூறுகின்றார்கள். இதில் அரசியல் உள்ளீடுகள் இருக்கும் போது நாம் சட்டமா அதிபரை எதற்கும் குறிப்பிடுவது பயனில்லை.
வீதியால் சென்றவனை பிடித்து வந்து நீ புலி, நீ சிங்கம், நீ கரடி, என கூறி அவர்களை பல வருடங்களாக வழக்குகளை பதியாது தடுத்து வைத்திருப்பது அரசியல் ரீதியானது
ஒருவரை கூண்டில் அடைக்கும் போது அவருக்கு எதிரான சாட்சியம் இருக்க வேண்டும் ஆனால் எந்தவிதமான சாட்சியமும் இன்றி பல வருடங்களாக தடுத்து வைத்திருந்து கொண்டு அவர்கள் மீது வழக்கும் பதியாது வைத்திருந்து கொண்டு சட்டமா அதிபர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எண்டு கூறுவது ஏற்புடையது அல்ல
சட்டமா அதிபர் வழக்குகளை சாட்சியங்கள் பார்த்து எந்த வழக்கில் பதியலாம் என பார்ப்பார் அதற்கு தற்போது இவர்கள் சாட்சியங்களை பெறவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்
ஆகவே இது அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய தீர்மானம். நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷே அரசியல் கைதிகளை விடுவிப்பது சட்டமா அதிபர் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறுவதை நான் மாறுகின்றேன்.
இது அரசியல் ரீதியாக ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து அமைச்சரகளுடன் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வரவேண்டும்.அனைத்து அரசியல் கைதிகளும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி பொது மனிப்பு மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும். என தெரிவித்தார்.