வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்படுகையில் முதலமைச்சர் பேச முடிமயாத நிலைக்கு தளர்ந்துபோய் பின்னர் ஒருவாறாக பேசி அரசியல் கைதிகள் விடயத்தை மேற்படி
அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
காலை 11.30மணிக்கு குறித்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. குறித்த சந்திப்பில் முக்கிய விடயமாக அரசியல் கைதிகள் விடயம் பேசப்பட்டுள்ளது.
இதன்போது முதலமைச்சர் கலங்கியதாகவும், சில நிமிடங்கள் பேச முடியாமல் தளர்ந்து போனதாகவும் பின்னர் ஒருவாறாக பேசி முடித்ததாகவும் சந்திப்பினை புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சந்திப்பின் பின்னர் சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை இந்தச் சந்திப்பில் மிக முக்கிய விடயமாக எடுத்துக் கொண்டு பேசியிருந்தோம். குறிப்பாக நேற்றய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பி ல் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான விருப்பை அவர் கொண்டிரு க்கும் போதும் பல அரசியல் காரணங்களினால் அந்த விருப்பம் நிறைவேறாமல் இருப்பது தொடர்பாகவும், எதிர்வரும் திங்கள் கிழமை அவர்களுடைய விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமையினை நான் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
மேலும் கடந்த சில தினங்களாக அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும் அவர்களில் 23பேருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளமையுடன் 9 பேரின் நிலை கவலைக்கிடம் என்பதையும் கூறியிருக்கின்றேன். இதன்போது அவர்கள் கேட்டிருந்தார்கள் அரசியல் கைதிகளுடைய உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறுத்துமாறு நீங் கள் கோரவில்லையா? என கேட்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு கேட்பதற்கான நிலை இல்லை. என்பதை அவர்களுக்கு நான் கூறியிருக்கின்றேன்.
அதாவது அவர்களுக்கு உறுதி மொழிகளை வழங்க முடியாத நிலையில் எப்படி நாங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்க முடியும் என நாங்கள் கேட்டிருந்தோம்.
மேலும் போராட்டத்தின் ஊடாக உயிரிழப்புக்கள் உண்டாகுமானால் அது தமிழ் மக்களுடைய இழப்பாகவே இருக்கும் என்பதையும் அதனால் அரசாங்கத்திற்கு எந்த இழப்பும் இல்லைதானே என்பதை அவர்கள் கூறினார்கள்.
மேலும் எமது மக்கள் தங்கள் மீதூன அநியாயங்களை தடுத்து நிறுத்தக்கோரியே இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்கின்றார்கள். இ;தனால் இது அகிம்சை ரீதியானது. இதனை பொ றுப்புவாய்ந்தவர்கள், அரசாங்கம், பெரிய விடயமாக பார்க்காவிட்டால், எமது மக்கள் தங்களை தாங்களே வருத்திக் கொண்டவர்களாக தொடர்ந்தும் இருக்கவேண்டியிருக்கும்.
இந்நிலையில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எடுக்க முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை – ஜனாதிபதி : முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு
இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என இன்று சிறிலங்கா ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிஇ அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும்இ இருந்த போதிலம் இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும்இ இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த முதலமைச்சர்இ ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கைதிகளின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தன்னுடைய முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன்இ ரி.குருகுலராஜாஇ டாக்டர்.பி.சத்தியலிங்கம்இ பி.டெனீஸ்வரன் ஆகியோர் இன்று காலை 11.00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். ஜனாதிபதியுடன் அவரது ஆலோசகர் கருணாரட்ணவும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டிருந்தார்.
வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்இ தேவைகள்இ மத்திய அரசாங்கத்தினால் எதிர்கொள்ளப்படும் தடைகள் என்பவற்றை விளக்கும் விரிவான அறிக்கை ஒன்றை முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியிடம் கையளித்தார். இதிலுள்ள விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்த முதலமைச்சர்இ தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கியமாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர்இ அதேபோல தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்
முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிஇ அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும்இ இருந்த போதிலம் இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும்இ இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த முதலமைச்சர்இ ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கைதிகளின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழ்க் கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதால் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் மட்டுமல்ல எனத் தெரிவித்த முதலமைச்சர்இ கைதிகளுடைய குடும்பத்தினரும் இதனால் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். தினசரி தன்னைச் சந்திக்கும் கைதிகளின் உறவினர்கள்இ இது தொடர்பில் எழுப்பும் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க வேண்டியிருப்பதாகவும் முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதனையடுத்து கைதிகளின் முழுமையான கோவைகளையும் தனக்கு அனுப்பிவைக்குமாறு சட்டமா அதிபரைப் பணித்த ஜனாதிபதிஇ எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்துக்கு தான் பதிலளிப்பதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்ததார்.