அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தினப்புயல் இணையத்தளத்திற்கு இரா.சம்பந்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்!

634

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 07ம் திகதி கைவிடுமாறு அவர்களிடம் கூறியிருந்தோம். ஆனால் கடந்த 17.11.2015 உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு நாங்கள் கூறவில்லை. அவர்களாகவே முன்வந்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு தமக்குப் புணர்வாழ்வு அழிக்குமாறு கேட்டிருந்தனர் அத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிட்டனர். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகள் இருக்கின்ற சிறைச்சாலைகளுக்குச் சென்று உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்கள். இது தொடர்பில் நாம் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இனியும் கொடுப்போம். அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மிகவும் காத்திரமான முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. என்று கூறிய அவர் விக்கினேஸ்வரன், சுமந்திரன் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகவே அரசியல் கைதிகளின் விடுதலை தாமதப்படுத்தப் பட்டிருக்கின்றது என்று கேட்டபொழுது அது வேறுவிடயம் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ஒரு சில ஊடகங்கள் இதனைத் திரிவு படுத்திப் பார்க்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

SHARE