நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே அனைத்து விசாரணைப் பொறிமுறைமைகளும் அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்ற செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான அனைத்து நீதிமன்ற விசாரணைகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட வகையிலேயே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை நீதிமன்றங்களில் வெளிநாட்டு சட்டத்தரணிகள் கடமையாற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்யாது புதிய சர்வதேச நீதிமன்றமொன்றை அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் ரீதியாகவும் இந்த விடயம் மிகவும் சவால் மிக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைப் பொறிமுறைமை உள்ளக ரீதியானதாகவே அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மதத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஆலோசனை நடாத்தி மிகவும் நிதானமாக நீதிமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியாக இலங்கை ஓரம் கட்டப்பட்டிருந்த நிலையில் நாட்டை தாம் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும், தற்போது உலக சமூகத்தின் ஆதரவினை திரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.