அரசியல் வங்குரோத்து அடைந்தவர்களின் ஊடக மையமாகியுள்ள சிறைச்சாலை!

243

z_p01-namal

தற்போது வரையில் அரசியல் வங்குரோத்து உடைவர்கள் பலரின் ஊடக மையமாக வெலிக்கடை உட்பட சிறைச்சாலைகள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சி காலத்தினுள் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி, அரச திறைச்சேரிகளை வெறுமையாக்கி, மோசடிகளின் மூலம் தங்களின் பைகளை நிறப்பிக் கொண்டவர்கள் சட்டத்தினுள் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பல முறை சிறைச்சாலை செல்வதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் அரசியல்வாதிகள் அந்த குற்றச்சாட்டுகள் தங்களுக்கு எதிராக உள்ள தனிப்பட்ட கோபத்தின் காரணமாகவே சுமத்தப்பட்டுள்ளதாக அழுது புலம்பி கூறுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில் மோசடியில் ஈடுபட்ட நபர்களின் நடவடிக்கை தொடர்பில் இந்த நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் உள்ளனர்.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள மோசடி அரசியல்வாதிகள் மக்கள் அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்கு பிரச்சாரம் ஒன்றை பெற்றுக் கொள்ள தங்களுக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் சிலருக்கு அழைப்பு விடுத்து பிரச்சாரம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு வருகைத்தரும் ஊடகவிலாளர்களின் கமராவிற்கு முன் கைவிலங்கிடப்பட்டுள்ள கைகளை உயராமாக தூக்கி வீரர்களை போன்று தம்மை காட்டிக் கொள்கின்றனர்.

இந்த முறையின் ஊடாக மக்களின் அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு ஊடக பிரச்சாரத்தை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருவதற்கு முன்னர் தங்களுக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் அழைப்பு விடுத்து அந்த இடத்தில் அனைத்து ஊடகவியலாளர்களும் வருகைதந்தன் பின்னர் ஊடகத்திற்கு முன்னர் தங்கள் நிரபராதி போன்று கருத்து வெளியிட்டு செல்வதனை மோசடி அரசியல்வாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

SHARE