அரச இரசாயன மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா உதவி

248

அரச இரசாயன மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரிய அரசாங்கம் 500 மில்லியன் ரூபா உதவி வழங்கவுள்ளது.

விசேட அபிவிருத்தி திட்ட உதவியின் அடிப்படையில் இவ்வாறு 500 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

genetic-engineering-2824medical-lab_mini

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் சியோக் சியோ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க இரசாயன பகுப்பாய்கு அறிக்கைகளை உரிய நேரத்தில் வழங்குதல், சர்வதேச தரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்றனவற்றில் காணப்பட்ட குறைபாடுகளைகளையும் நோக்கில் இவ்வாறு உதவி வழங்கப்பட உள்ளது.

தொழில்நுட்ப ரீதியில் தரமான ஆய்வு கூடங்கள் காணப்படாத காரணத்தினால் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதில் கால தாமதம் ஏற்படுவதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆய்வு கூடங்களை மேம்படுத்துவதற்கான உதவி வழங்குதல் தொடர்பிலான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

SHARE