அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு .

180

அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 2 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரை உயர்த்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகவும் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து அதாவது ஜனவரி மாதம் முதல் 2500 முதல் 10,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பள அதிகரிப்பை தவணை முறையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்போது கடன் பெற்றுக்கொள்ள மற்றும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள அரச ஊழியர்கள் பயனடையக் கூடியவகையில் செயற்படவுள்ளதாகவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

SHARE