அரச ஊழியர்களுக்கு விசேட சுற்றறிக்கை

105
அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்பட்டுள்ள பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். – ada derana

SHARE