அரச பத்திரிகையில் ரணில் முகத்தில் கறுப்புக் கொடி.

311

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முகத்தில் கறுப்புக் கொடியுடன் கூடிய புகைப்படம் ஒன்றை ‘டெய்லி நியூஸ்’ தேசிய பத்திரிகையில் அச்சிடுவதற்கு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் உள்ள ஒருவர் திட்டமிட்டிருந்ததாக ‘லங்கா நியூஸ் வெப்’ இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு அச்சிடப்படுவது ஜனவரி 08 ம் திகதி நல்லாட்சியின் ஓராண்டு நினைவு தினத்தில் வௌிவந்த டெய்லி நியூஸ் பத்திரிகையின் முதலாம் மற்றும் இரண்டாம் பக்கங்களில் இருந்த புகைப்படங்களில். இவ்வாறு கறுப்புக் கொடியுடன் அச்சிடப்படுவது, நாடு பூராகவும் அன்றைய தினம் கறுப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சில திட்டமிட்டிருந்ததின் பின்புலத்திலாகும்.

இந்த புகைப்படத்துடன் பத்திரிகை அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இவ்வாறு புகைப்படத்துடன் கறுப்புக் கொடி அச்சிடப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து கொண்ட லேக் ஹவுஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள், அச்சிடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தியதுடன், அதன்போது அச்சிடப்பட்டிருந்த சுமார் 20,000 பிரதிகளை நீக்கினர்.

அந்த புகைப்படம் நீக்கப்பட்டு மீண்டும் பிரதிகளை அச்சிடப்பட்டு மறுதினம் விநியோகிக்கும் நடவடிக்கையில் லேக் ஹவுஸ் நிறுவனம் மும்முரமாக இருந்ததே தவிர, பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில் இருந்த பிரதமரின் புகைப்படத்தில் காணப்பட்ட கறுப்புக் கொடி யார் கண்ணிலும் பட்டிருக்கவில்லை. அந்தப் புகைப்படத்துடனேயே அந்தப் பத்திரிகை சந்தைக்கும் வந்திருந்தது.

அந்த பத்திரிகையின் பக்க வடிவமைப்பாளரிடம் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது அவர் கூறியிருப்பது, கைதவறி இந்த கறுப்புக் கொடி பிரதமரின் முகத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக.

தேசிய பத்திரிகையோ அல்லது வேறு பத்திரிகைகளோ அச்சிடப்படு முன் பலரிடம் அங்கீகாரம் பெற வேண்டும். எனினும் எல்லோருடைய கண்களையும் மறக்கடித்து இவ்வாறு அச்சிடும் அளவிற்கு திட்டமிடப்பட்டிருப்பதின் பின்னணியில் எவாராவது இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏதாவது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றதா என்று “டெய்லி நியூஸ்” பத்திரிகையின் ஆசிரியரிடம் நாம் வினவியதற்கு, அந்த சம்பவம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறி இருந்தார். அத்துடன் அன்றைய நாட்களில் அவர் விடுமுறையில் இருந்ததாகவும் எம்மிடம் மேலும் கூறினார். தான் அவ்வாறான ஒரு செய்தி பார்க்கவில்லை என்றும், தான் அதை அறிந்து கொண்டது ராவய பத்திரிகையில் வௌிவந்த செய்தி மூலமே என்றும் அவர் கூறினார்.

எமக்கு அறியக் கிடைத்துள்ள வரையில், இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் தவறி உள்ளனர்.

பொறுப்புக் கூற வேண்டியவர்களின் சேவையை இடைநிறுத்தி, விசாரணை ஒன்றை வெளிப்புறமாக அல்லது உள்ளக ரீதியாக மேற்கொள்வதற்கு அதிகாரிகள் தவறியுள்ளமைக்கு லேக் ஹவுஸ் ஊழியர்கள் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.ms-r

SHARE