அரச புலனாய்வு ஊடகவியலாளர்கள் குறித்து தமிழ் அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் எச்சரிக்கை!

243

 

media
ஊடகம் என்ற போர்வையிலும், தமிழ் அரசியல் வாதிகளுடைய அரசியல் நடவடிக்கைகளை சீர்குழைக்கும் வகையிலும், கட்சிக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலும் என்றுமில்லாதவாறு இராணுவப் புனாய்வு, என்ஐபி, சிஐடி, சிசிடி, இன்னும் நகரப் புலனாய்வு, கிராமப் புலனாய்வு என்று பகுதி பகுதியாக அரசதரப்பினரால் பிரித்து குறிப்பாக தமிழ்ப் பிரதேசத்தில் இவர்களுடைய செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு நிகழ்வு தொடர்பாக அரசாங்கத்திற்கோ, அல்லது அரச அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குவது தவறில்லை. யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டின் பின்னரே இவ்வாறான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனுடைய நோக்கம் என்னவென்றால் அரசாங்கத்தின் நிகழ்ச்சிக்கு ஏற்ப செயற்படுவதே. விடுதலைப்புலிகளுடனான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்கலாக செயற்பட்ட ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி போன்ற கட்சிகள் செயற்பட்டு வந்தன. தற்பொழுது அவைகள் வெளிப்படையாக செயற்படமுடியாமல் போனதன் நிமித்தமும்,  இதில் மூன்று ஆயுதக் கட்சிகள் கூட்டமைப்புடன் இணைந்து தமது செயற்பாட்டினை நடத்திவருவதன் காரணத்தினாலும், இலத்திரனியல் ஊடகம் என்ற போர்வையில் ஊடகங்களில் அனுபவம் இல்லாத, தேசியம் சுயநிர்ணய உரிமை பற்றி சிந்திக்காத,  ஊடகத்துறையில் குறிக்கோள் அற்றவர்கள் அரசின் புலனாய்வு ஊடகத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் பெண்கள், ஆண்களேன இருபாலரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

625-500-560-350-160-300-053-800-900-160-90
இவர்களுடைய  பிரதான நோக்கம்:-
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குழைப்பது.
தமிழர் தரப்பிலிருக்கக் கூடிய கட்சிகளிடையே பிரிவினையை தோற்றுவிப்பது.
2. வடமாகாணசபையிலும் சரி, கூட்டமைப்பினருக்கிடையிலும் சரி பிரிவினைகளைத் தோற்றுவிப்பது.
3. கூட்டமைப்பின் தமிழ் அரசியல் வாதிகளுடைய தனிப்பட்ட விடையங்களைக் கையாண்டு அவர்களுடைய செய்திகளை இணைத்தளங்களில் வெளியிடுவது.
4.புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகளின் செயற்பாடுகளை அவதாணித்து அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குகின்ற பொழுது அதன் தரவுகளை துள்ளியமாக வழங்குவது.
5.தேசியம்இ சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் மீது தமது இலத்திரனியல் ஊடகங்களால் அவர்களுக்கு சேறுபூசுவது.
வடமாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களுடை செயற்பாடுகளை முடக்குவது.
6. உண்மைத் தன்மையை உலகறியச்செய்யும் ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசுவது.
7. கூட்டமைப்பில் இருக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சண்டைகளை மூட்டிவிடுவது. அதனைப் பதிவு செய்து தமது ஊடகங்களில் வெளியிடுவது.
8. இனப்படுகொலை தொடர்பில் குரல் கொடுப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக செயற்படுவது.
9. சமூகப் பிரச்சினையை முன்கொண்டு வருகின்றோம் எனக் கூறி தனிமனித சுதந்திரத்தில் கைவைத்து அவர்களின் அரைநிர்வாணப் படங்களை வெளியிடுவது.
10. தனிநபருக்கு எதிராக ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது.
போன்ற செயல் காரியங்களில் இந்த ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ் ஊடகங்களையும், இவ் ஊடகவியலாளர்களையும் இணங்காண்பது எப்படி:-
1. குறித்த இவர்கள் ஊடகத்துறையில் கொள்கையற்றவர்களாக இருப்பார்கள்.
2. இவர்களுடைய வெளித்தோற்றம் ஊடகத்துறைக்கு அப்பாற்பட்டது.
ஆரசியல் வாதிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பிரபல்யமற்றவர்கள்.
தேசியம்,  சுயநிர்ணயம் சார்ந்த விடயங்களை இவர்கள் அலட்டி, கொள்ளமாட்டார்கள்.
3.சமகால அரசியல் தொடர்பிலும், ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பிலும். கட்டுரை தொடர்பிலும் இவர்களுக்கு அறவே தெரியாது.

4. படங்களை எடுத்து தகவல்களைக் கொடுக்கும் விடையத்தினை மட்டுமே இவர்கள் செயற்படுத்துவார்கள்.
5. நான் நீ என முந்திக்கொண்டு படங்களை எடுப்பார்கள் ஆனால் எந்தவித தேசிய பத்திரிகையிலும், தேசிய ஊடகங்களிலும் இச் செய்திகள் பிரசுரிக்கப்படுவதில்லை.
6. தமக்கான ஒரு ஊடகத்தை வைத்து அதில் மட்டும் அத்தனை விடையங்களும் வெளிவரும்.
7. பத்துக்குமேற்பட்ட தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் இனங்காணப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இவர்களுடைய இணையத்தளத்தில் தேசியம், சுயநிர்ணயம் சார்ந்த எந்தவொரு செய்திகளும் வெளிவராது. அவ்வாறு செய்திகள் வெளிவருவதாக இருந்தாலும் அதனை கொப்பி கட் செய்து தான் போடுவார்கள்.
8. கட்சி சார்ந்த ஊடகங்கவியலாளர்களாவே இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய செயற்பாடுகள் ஒரு குழுவாகவே செயற்படுத்தப்படுகின்றது.
பெண்களின் சமாச்சார விசயங்களை அறிந்து அதனை தமது இணையத்தளத்தின் பிரபல்யத்திற்காக அதனை வெளியிடுவார்கள்.
இது போன்ற தமிழ் சமூதாயத்தை சீர்குழைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக இவர்களுடைய செயற்பாடுகள் அமையப்பெறுகின்றது. சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் லஞ்ச ஊழல்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற இனத்தினிப்பு தொடர்பாக இவர்களது ஊடகங்கள் அமர்த்தி வாசிக்கும்.
ஒருவருடைய அந்தரங்க செய்திகளை வெளியிட்டு அவரை மிரட்டி இச் செய்தியை எமது இணையத்தளத்தில் இருந்து நீக்குவதாக இருந்தால் எமக்கு இலட்சக்கணக்கில் பணம் தரவேண்டும் என்று கப்பம் கோருவார்கள்.

இச்சம்பவங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் உள்ளது.
அரசில் வாதிகளுடன் தொடர்பு கொண்டு நடுநிலைவாதிகள் எனக் கூறி அவர்களிடமிருந்து விடையங்களை அறிந்து கொண்டு ஒரு சாராரைத் தாக்கி அந்த அரசியல் வாதி கருத்து தெரிவிப்பாராக இருந்தால் அந்த நிகழ்ச்சி நிரலை எதுவித தனிக்கைகளும் இல்லாமல் தமது இணைத்தளத்தில் அப்படியே பிரசுரிப்பார்கள்.
இப்படிப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கைகளையே இந்த ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு செல்வதால் செவ்வனே தமது ஊடகத் தொழிலை மேற்கொள்கின்ற ஊடகவியலாளர்களுக்கும் அதிதிரிப்தியை மேற்கொள்ளும் செயற்பாடாக இவர்களது செயற்பாடு அமையப்பெற்றுள்ளது.
இவர்களுடைய இணைய ஊர்வலம் வடமாகாணசபையில் இருபதுக்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்களையும் நான்கு அமைச்சர்களையும் மிகக் கேவலமாக சித்தரித்து ஊடக தர்மத்துக்கு அப்பால் இவர்கள் தொடர்பாக செய்திகளை பிரசுரித்து வருகின்றனர்.
இது போன்று கூட்டமைப்பு சார்பாக பத்து எம்பிக்களுக்கு எதிராக இவர்கள் மிகக் கீழ்த்தரமான செய்திகளை வெளியிட்டிருந்தனர். இவர்களுடைய பிரதான நோக்கம் நாம் முன்பு குறிப்பிட்டது போல தமிழ்த் தேசியத்தைக் குழைப்பதும், தமிழ் மக்களுடைய ஒற்றுமையை சீர்குழைப்பதும், சமூக செயற்பாடுகளைச் சீர்குழைத்து நாம் எமது பிரதேசங்களை சீர் திருத்துகின்றோம் என்று கூறிக்கொண்டு இவர்கள் பிழையான வழிகளில் பெண்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை மிரட்டி கப்பம் கோரும் செயற்பாடுகளிலும் இந்த ஊடகவியலாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரசின் புலானாய்வாளர்கள் அனைவருடனும் நெருங்கிய தொடர்புடையவர்கள். ஆகவே இத்தனை விடையங்களையும் கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் வாதிகள் உங்களுடைய கருத்துக்களை எந்த ஊடகங்களுக்கு, எந்த ஊடகவியலாளர்களுக்கு எப்படி வழங்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

ஊடகத் தர்மத்துக்கு அமைய குறிப்பிட்ட ஊடகங்களின் பெயர்களையும் முகவரிகளையும் நாம் குறிப்பிடவில்லை. ஆனால் இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இதில் இருக்கக் கூடிய ஊடகவியலாளர்கள் அனைவரும் தமிழ் ஊடகவியலாளர்கள் என்பதேயாகும். இச் செய்தி வெளியிடுகின்ற பொழுது இதனைப் பார்த்த உங்களுக்கு நிச்சயமாக ஒரு தமிழ்த் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் உங்கள் மனம் குமுறும். இத்தகைய செயற்பாடுகளை விட்டு விட்டு நீங்கள் சமூதாயத்தில் நல்ல பிரஜைகளாக வளரவேண்டும். தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகசெயல்களில் ஊடகவியலாளர்கள் போர்வையை போர்த்திக் கொண்டு காட்டிக் கொடுக்கக் கூடாது.
2009ம் ஆண்டு காலத்திற்குப் பின்னர் வந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் உங்களுடனும் இவ்வாறான ஊடகவியலாளர்கள் சுற்றித்திரிவார்களாக இருந்தால் அவர்களிடமிருந்து நீங்களும் விலகிக்கொள்ளுங்கள் எம் தமிழ் மக்களுக்கான பிரச்சனை இன்னும் முற்றுப் பெறவில்லை. சர்வேதேச பூகோல அரசியலை அரசாங்கத்திடம் கைக்கூலியாக செயற்படுகின்ற தமிழ் புலனாய்வு ஊடகவியலாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். எமது தமிழினம் தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படவேண்டுமாக இருந்தால். இவ்வாறான ஊடகவியலாளர்களை சமூதாயத்திலிருந்து தமிழ்ச் சமூகமும், தமிழ் அரசியல் வாதிகளும் ஓரம் கட்டவேண்டும். இல்லையே விஷக் கிருமிகளாக இருந்து தமிழினத்தின் விடுதலையை நசகரம் செய்வார்கள்.
-சுழியோடி-

SHARE