அரச வங்கிகளை கட்டுப்படுத்தும் யோசனைகள் நீக்கப்பட வேண்டும் – லால்காந்த

280

அரச வங்கிகளை கட்டுப்படுத்தும் யோசனைகள் நீக்கப்பட வேண்டுமென தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க, தனியார்துறை ஊழியர்களின் உரிமைகளை முடக்கும் வகையில் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குத்தகை வர்த்தகம் வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் n;தாடர்பிலான யோசனைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென லால்காந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்ட யோசனைகள் வங்கித்துறiயை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE