அரச வங்கியொன்றில் முன்னாள் ஆட்சியாளர்களால் 2000 மில்லியன் ரூபா மோசடி!

183

கடந்த அரசாங்கத்தின் போது கடுமையாக அரசியல்மயமாக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அமைய வழங்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நிதி குற்றப் புலனாய்வு பிரிவு, தனது விசாரணைகளை நிறைவு செய்து, அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 2000 மில்லியன் ரூபா தொடர்பில் விடயங்களை ஆராய்ந்த நிலையில், அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்கு அப்பால் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட அந்த பணம் தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல்வாதிகளின் அவசியத்திற்கமைய இவ்வாறு அரசாங்க வங்கி ஒன்று பணம் வழங்குவது கடுமையான குற்றச்சாட்டாகும்.

இதேவேளை, கடன் பணமாக வழங்கப்பட்ட குறித்த பணம் அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஏற்றுகொள்ள கூடிய சாட்சிகள் கிடைத்துள்ளன.

கடன் பணம் உண்மையாக பெற்று கொண்ட விடயத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிகமான பணம் கடனாக பெற்று கொண்டு அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியடை தொடர்பில் அந்த பணத்தை பெற்று கொண்ட நபர்கள் மற்றும் கடன் பணமான உரிய முறையின்றி இந்த பணத்தை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு பிணை வழங்கப்படாதென்பது குறிப்பிடத்தக்கது.

நிதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் வங்கியின் அதிகாரிகள், கடன் பெற்றவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்க அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக கடன் பணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் இங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதிமோசடி தடுப்பு பொலிஸ் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பித்தது

லங்காபுத்ர வங்கியின் கடன் தொகையில் 2 பில்லியன் ரூபாய்கள் அறிவிடப்படாமை தொடர்பிலான விசாரணை அறிக்கையை நிதிமோசடிகள் தடுப்பு பொலிஸ் பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் அளித்துள்ள லங்காபுத்ர வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தன 17 தனியாட்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த தொகையை செலுத்த தவறியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின்போது குறித்தவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் முன்னைய அரசாங்க காலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கடன்கள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிக்கவுள்ளது.

 

SHARE