அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினை சந்திக்கத் தயாரில்லை!– பிரதமர்

323
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களை சந்திக்கத் தயாரில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சங்கத்தின் அதிகாரிகள் உறுப்பினர்கள் ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி, சுகாதார அமைச்சரவை சந்தித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் நான் அவர்களை சந்திக்க வேண்டிய அவசியமில்ல.

ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்கின்றேன்.

ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விடயமொன்றுக்காக பேச்சுவார்த்தை நடத்தி காலத்தை விரயமாக்க விரும்பவில்லை. எனக்கு அதனை விடவும் அதிகளவு பணிகள் காணப்படுகின்றன.

சில அதிகாரிகள் முன்hனள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவான வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.

SHARE