மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 350 சிறுவர் சிறுமியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 350 சிறுவர் சிறுமியர் நான்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை துணை மாவட்டச் செயலாளர் சமன் அனுர தெரிவித்துள்ளார்.
சில சிறுவாகளின் பெற்றோர் இருவரும் இறந்துள்ளனர். மேலும் சிலரின் பெற்றோர் காணாமல் போயுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாடிய வீட்டு முற்றம், விளையாட்டுப் பொருட்கள், பாடசாலை வாழ்க்கை என பல்வேறு விடயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த சிறுவர்கள் கடுமையான உளவியல் பாதிப்புக்களையும் அதிர்ச்சியையும் எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.