அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு உள்ளாகி உள்ளார்.அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு உள்ளாகி உள்ளார்.

271
அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு உள்ளாகி உள்ளார்:

அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு உள்ளாகி உள்ளார். இன்று காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர், வீட்டிற்கு வெளியில் அவரை அழைத்து, சரமாரியாக வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், கையிலும் முதுகிலும் தொடையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த தெரியவருவதாவது 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்பவரின் வீட்டிற்கு, இன்று காலை சென்ற சில இனந்தெரியாத நபர்கள், வீட்டாரை விசாரித்துவிட்டு, அவரை வெளியில் வரவழைத்து வெட்ட முயற்சித்துள்ளார்கள். இதனையடுத்து அவர் கத்திக்கொண்டு வீட்டைச் சுற்றி ஓடிய போது துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE