அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை கோரியுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய

163

சர்ச்சைக்குரிய அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டிப் பெர்னாண்டோவிற்கு நேற்றைய தினம் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கரு ஜயசூரிய இதனைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்ட அல்லது வேறு வரப் பிரசாதங்களை பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை தமக்கு அறியத் தருமாறு சபாநாயகர் கோரியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அது பற்றி நானும் தெரிந்து கொள்ள வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பணம் பெற்றுக் கொண்ட விபரங்களை தமக்கு வழங்குமாறு ஏற்கனவே கரு ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE