தமிழ் சினிமாவை தன் பிரமாண்டத்தால் பாலிவுட் படங்களுக்கு நிகராக கொண்டு வந்தவர் ஷங்கர். இவர் தற்போது எந்திரன் -2 படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலைகளில் பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க அர்னால்ட் சம்மதித்து விட்டார். ஆனால், அர்னால்ட் இப்படத்தின் திரைக்கதையை மாற்ற வேண்டும், அது எனக்கு பிடித்தால் தான் நடிக்க சம்மதிப்பேன் என கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் வேண்டுமானால் அர்னால்ட் பெரிய ஸ்டாராக இருக்கலாம், இந்தியாவை பொறுத்த வரை ரஜினியின் முகத்திற்கு தான் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு, தற்போது திரைக்கதை மாற்றினால்ரஜினியின் காட்சிகள் குறைந்து விடும். இதனால், ஷங்கர் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.