அறிமுகமாகிறது மஞ்சள் தேநீர்

150

இதுவரை தேநீர், பிளாக் தேநீர், பால் கலக்காத தேநீர், சர்க்கரை கலக்காத தேநீர், இஞ்சி கலந்த தேநீர், கிரீன் தேநீர் என பலவகையான தேநீர் அறிமுகமாகி மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் மஞ்சள் கலந்த தேநீர் அறிமுகமாகவிருக்கிறது.

இந்த மஞ்சள் தேநீரின் பலன்களைப் பட்டியலிட்டால் நீங்களும் ஒரு முறை அதனை தயாரித்து சுவைக்க தொடங்கிவிடுவீர்கள். உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.  கல்லீரல், நுரையீரல், இதயம், பித்தப்பை கல், டைப் 2 டயாபடீஸ், ஓர்த்தரைடீஸ், அல்சைமர் எனப்படும் நினைவுத்திறன் குறைவு நோய், புற்றுநோய் என பலவகையான பாதிப்புகளிலிருந்து குணமடையவும், இத்தகையப் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் தற்காப்பதற்காகவும் இதனை பயன்படுத்தலாம்.

இதன்போது சுத்திகரிக்கப்பட்ட மஞ்சள் கிழங்கையோ அல்லது மஞ்சள் துண்டுகளையோ அல்லது மஞ்சள் தூளையோ தேவையான அளவிற்கு பயன்படுத்தி தேநீரை தயாரித்து பருகினால் நலம் உண்டாகும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் ஒருவர் தினமும் 3 அல்லது 4 கிராம் அளவிற்கு மஞ்சளை உணவாகவோ அல்லது உணவின் மூலமோ சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்கு இயல்பை விட அதிகளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இருக்கும். அதே சமயத்தில் இதனை தயாரிக்கும் போது பனை வெல்லத்தையோ அல்லது தேனையோ சுவைக்காக சேர்ப்பது கூடுதல் பலனைத் தரும்.

SHARE