கிளிநொச்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரியாலயமான அறிவகத்தில் இன்று பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றது. கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப்பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர்.
இன்று வரை தமிழ்மக்களின் அவலங்கள் துயரங்கள் ஆறாத போதிலும் தமிழர்கள் தமது பண்பாட்டு நிகழ்வாகிய தைப்பொங்கல் தினத்தை மிகவும் அமைதியான முறையில் பொங்கலிட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர். 2016ம் ஆண்டில் தமிழ்மக்களின் வாழ்வில் நிறைந்த சமாதானமும் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வும் பெற்று தமிழ்மக்கள் வாழவேண்டும் என்பதும் தங்களைத்தாங்களே ஆளவேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாகவும் இருந்தது.