அறுவை சிகிச்சை முடிந்தது, ஐபிஎல்லில் விளையாடுவேன்! தோனியின் அறிவிப்பால் ரசிகர்கள் குதூகலம்

139

 

காலில் அறுவை சிகிச்சை முடிந்துள்ளது எனவும், ஐபிஎல் தொடரில் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் எம்.எஸ்.தோனி அறிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் தோனியிடம் இருந்து வராமல் இருந்ததால் ரசிகர்களிடையே குழப்பம் இருந்தது.

இந்த நிலையில் ரசிகர்ளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக தோனியே அறிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்துதான் நான் ஓய்வு பெற்றுள்ளேன். ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை.

காலில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. நவம்பருக்குள் முழுவதுமாக நலம் பெறுவேன் என மருத்துவர் கூறியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

 

SHARE