அலரி மாளிகையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த மக்கள் தயாராக வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்துள்ளார்.
“பிணைமுறி மோசடியில் பிரதமரின் வகிபாகம்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வை ஊழல் எதிர்ப்பு மத்திய நிலையம் கொழும்பிலுள்ள பொது நூலக கேட்போர்கூடத்தில் நடத்தியது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூட்சுமமான முறையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டுள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.