அலவ்வயில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மரணம் – பஸ் தீ வைப்பு

312

அலவ்வ – வாரியகொட பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் – முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமையால் கோபமடைந்த குழுவினர் பஸ்ஸினை தீ வைத்துள்ளனர்.

எரிபொருள் நிரம்பு நிலையத்திலிருந்து பிரதான பாதைக்கு சென்ற முச்சக்கரவண்டி, வவுனியா – கொழும்பு தனியார் பஸ்ஸில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றதிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதேச வாசிகள் அவ்வழியில் பயணித்த பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறித்த நிலமை பொலிஸாரின் தலையீட்டால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதுடன்,குறித்த பஸ்ஸின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.bus

SHARE