அலி சப்ரிக்கும் அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

102

 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதார உதவிகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் இந்த விடயம் குறித்து அவரது ’எக்ஸ்’ செயலி பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவின் பொதுச் சபைக் கூட்டம்
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் அமெரிக்க பொருளாதார உதவி, மனித உரிமைகள் மற்றும் திறந்த இந்தோ – பசுபிக் தொடர்பான அமெரிக்காவின் நிலைமை தொடர்பில், விவாதிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றக்கூடிய பல்வேறு வழிமுறைகள் தொடர்பில், கவனம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE