அல் கயீதாவின் மூத்த தலைவர் ஆப்கன் தாக்குதலில் கொலை- அமெரிக்கா

313

 

ஆப்கனின் குன்னார் மாகாணத்தில் நடத்திய துல்லிய தாக்குதல் என்று அமெரிக்க மத்திய பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் குறிப்பிடுகின்ற தாக்குதலில், அல் கயீதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஃபாருக் அல்-காக்டானியை கொன்றிருப்பதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.

ஆளில்லா விமானம்Image copyrightGETTY IMAGES
Image captionஆப்கானின் குன்னார் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் மூலம் ஃபாருக் அல்-காக்டானியை அமெரிக்கா இலக்கு தாக்கியிருக்கிறது

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதிக்கு முஸ்லீம் தலைவரும், அமெரிக்காவுக்கு எதிராக திட்டமிடும் மூத்த தீவிரவாதிகளில் ஒருவரும் தான் இந்த அல்-காக்டானி என்று அது விவரித்திருக்கிறது.

அக்டோபர் மாதம் இறுதியில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதல், இன்னொரு அல் கயீதா தலைவரான பிலால் அல்-லக்டேபியையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் தலிபானுக்கு மேலும் ஆதரவான நிலையை அல் கயீதாவுக்கு விசுவாசமான ஆயுதப்படையினர் எடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு பேரவையில் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரின் நிலை இந்நாட்டில் குறிப்பிடப்படும்படியாக பலவீனமடைந்திருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE