அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.” முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதுளை UCMC கூட்டத்தில் தெரிவிப்பு

486

அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”
முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதுளை UCMC கூட்டத்தில் தெரிவிப்பு .


நடைபெறப் போகும் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்களின் இருப்பு , எதிர்காலம் பற்றிய உத்தரவாதமொன்றினை பெறுமுகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான் கலந்துரையாடல் கூட்டமொன்று மலையக முஸ்லிம் கவுன்சில் ( ucmc) மூலம் கடந்த 09 ந் திகதி பதுளை நெஸ்ட் லைன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.” என்று தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் “ குறித்த உரையாடலின் ஒலி நாடா மடவெல நியூஸ் டொட் கொம்மில் நீங்கள் கேட்டறியலாம். இனவாதத்தின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இந்த அரசாங்கம் இனவாத்தத்தின் மூலமே ஆட்சியை முன்கொண்டு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அன்று சொன்னார்கள் பள்ளிவாயில்களில் பாங்கு சொல்வதை நான் தடைசெய்யப் போகிறேன் என்று. ஆனால் ஐந்து வேளையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியில் பாங்கு சொல்ல வைத்தேன். இதற்கு சில தலைவர்கள் அச்சம் கொண்டார்கள்.
அன்று எரிக்கப் பட்ட வீடுகளை நாம் நல்ல முறையில் மீண்டும் கட்டிக் கொடுத்துள்ளோம். ஆனால் கின்தொட்டை போன்ற பிரதேசங்களில் நடந்தவற்றுக்கு இந்த அரசாங்கம் ஏதாவது நிவாரணம் கொடுத்துள்ளதா என்பதை தேடி பார்க்கவும். இந்த நாடு முஸ்லிம் சிங்கள தமிழர்கள் எல்லோரினதும் நாடு . நீங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள் . இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் . இந்த நாட்டிலேயே இறந்து நாளை புதைக்கப் படுவீர்கள். இந்த நாட்டின் விடுதலைக்காக சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தலைவர்களை எங்களால் மறந்து விட முடியாது.
இன்று இந்த நாட்தில் ஒவ்வொரு நாளும் கொலைகள் , குற்றச் செயல்கள் சரளமாக நடைபெறுகின்றது. வடக்கில் நடக்கும் செயல்களை தேடிப் பாருங்கள். சக மாணவரை ஏனைய மாணவர்கள் அடித்துக் கொல்கின்றார்கள். இந்த அரசாங்கம் எல்லா துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆகவே இனமத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்ப நாமெல்லோரும் கைகோர்த்து ஒன்று படுவோம் என்றும் கூறினார்
இக்கூட்டத்தில் “பொது ஜன பெரமுனவின் பதுளை மாவட்ட அமைப்பாளர் பா ம உறுப்பினருமான குமார் வெல்கம , பா ம உறுப்பினர் தேனுக்க விதான கமகே, சாமிக புத்த தாச மற்றும் பதுளை மாநகர மேயர் பிரியந்த, ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்ளால் மௌலவி , அதன் செயலர் அப்துல் அசீஸ் மற்றும் ஊடகவியலாளர் அஹ்மத் பாரூக் உற்பட பதுளை மொனராகல மாவட்ட முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

SHARE