(மன்னார் நகர் நிருபர்)
International college of Cambridge வளாகத்தினுடாக மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் ரூபி அழகுக்கலை நிலையத்தின் ஏற்பாட்டில் 2018 ம் ஆண்டு அழகுகலை பயிற்சி மற்றும் தொழில் ரீதியான அழகுகலை பயிற்சியினை பெற்ற மாணவிகளை கௌரவிக்கும் மற்றும் INVG3 மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் நகர சபை புதிய மண்டபத்தில் ரூபி அழகுக்கலை நிலையத்தின் நிறுவனர் திருமதி.ரூபி தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மலைநாட்டு கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவருத்தி அமைச்சின் மேலதிக செயளாலர் திருமதி.ஸ்டான்லி டிமெல் மற்றும் International college of Cambridge vavuniya chairman திரு.சந்திர குமார் யாழ்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப பீடாதிபதி திரு.தனபாலன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் பிரதி கல்வி பணிப்பாளர் மன்னார் நகர் பிரதேச செயலாளர் மற்றும் அழகுகலை நிபுணர்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பெதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் திறமையான முறையில் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பெறுமதியான பரீசில்களும் வழங்கி வைக்கப்பட்டது பல்வேறு கலைநிகழ்சியுடன் இடம் பெற்ற நிகழ்வில் பயிற்சியினை முடித்த பெண்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்ட பெண்களின் மணப்பெண் அலங்கார அணிவகுப்பும் மணப்பெண் கண்காட்சியும் இடம் பெற்றது குறிப்பிடதக்கது.