அழகு சீரியல் புகழ் ஸ்ருதிக்கு யாருடன், எப்போது திருமணம்- அவரே கூறிய தகவல்

155

சினிமா ஆசையால் தங்களது சொந்த வாழ்க்கையில் திருமணம், குழந்தைகள் என சில விஷயங்களை நடிகைகள் தள்ளிப்போடுகின்றனர்.

வாய்ப்புகள் கிடைக்கும் போதே வெற்றிபெற வேண்டும் என்று பலர் உழைக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் நடிகைகளை பார்த்து நீங்கள் எப்போது தான் திருமணம் செய்துகொள்வீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவர்.

அப்படி ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது அழகு சீரியல் புகழ் ஸ்ருதியை தான். அவரும் சின்னத்திரையில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் திருமணம் குறித்து கேட்டபோது, இதுவரை என் வாழ்க்கையில் எதையும் பிளான் செய்தது கிடையாது. அப்படி பிளான் செய்தாலும் அது சரியாக நடந்தது இல்லை. கல்யாணமும் அப்படி தான் எனக்கு என்ன பிளானும் இல்லை, வீட்டில் பார்த்துக் கொள்வார்கள் என்று முடித்துள்ளார்.

SHARE