கனேடிய நகரம் ஒன்றில் அங்குள்ள நிர்வாகத்தினர் திடீரென்று அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள First Nation reserve பகுதியில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 6 நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது அங்குள்ள நிர்வாகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுமட்டுமின்றி தற்கொலை மனநிலையில் உள்ள 170 பள்ளி மாணவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மானிட்டோபா பகுதியில் உள்ள நிர்வாகி ஒருவர் அவசரப்பிரிவினை உடனடியாக இப்பகுதிக்கு அனுப்பி வைக்ககோரி முறைப்படி கோரிக்கை வைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 4 பள்ளி மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர் தற்கொலை முயற்சிகளால் பெரும்பாலானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த நகரம் முழுவதும் இதன் தாக்கம் பாதித்துள்ளதை உணரமுடிவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் மன அழுத்தம், கவலை, நம்பிக்கையின்மை என பெருகியுள்ளதை காணமுடிவதாக கூறுகின்றனர். |