அவசர நிலை எச்சரிக்கைகள் இனி மொபைல் போன்களுக்கு அனுப்பப்படும் கனடா அரசு ..!

194

காட்டுத்தீ, மஞ்சள் எச்சரிக்கைகள், இயற்கைப் பேரழிவுகள், தீவிரவாதத் தாக்குதல்கள் அல்லது மோசமான வானிலை போன்ற அவசர நிலை எச்சரிக்கைகள் இனி மொபைல் போன்களுக்கே அனுப்பப்படும் வகையில் கனடாவின் வயர்லெஸ் வழங்குபவர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளும்படி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசர நிலை எச்சரிக்கைகள் விடுக்கப்படும்போது அதுகுறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஸ்மார்ட்போன்களில் அலாரம் ஒலிக்கும் வகையில் கனடாவின் வயர்லெஸ் வழங்குபவர்கள் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.

நாட்டு ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் தொலைக்கட்டுப்பாடு கமிஷன் (CRTC)இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏப்ரல் 6 வரை காலக்கெடு கொடுத்துள்ளது.

செய்தித் தொடர்பாளரான Patricia Valladao கூறும்போது, இந்த எச்சரிக்கை செய்திகளை மொபைல் வாடிக்கையாளர்கள் தவிர்க்க விருப்பத்தேர்வு(Option) கொடுக்கப்படவில்லை.

இது மிகவும் முக்கியமானது என்பதால் மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, இந்த எச்சரிக்கை செய்திகள் அவர்களுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலோ மியூட் செய்யப்பட்டிருந்தாலோ இந்த செய்திகள் கிடைக்காது.

உரை (Text) வடிவில் இருக்கும் இந்த எச்சரிக்கை செய்திகளுடன் வாய்ப்பிருந்தால் புகைப்படங்களும் சேர்த்து அனுப்பப்படும்.

இந்த அவசர நிலை எச்சரிக்கைகள் விடுக்கும் வசதிக்காக மொபைல் நிறுவனங்கள் தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்ககூடாது என்றும் CRTC கூறியுள்ளது

SHARE