ரஷ்ய விமானங்கள் சிரியா மீது நேற்று நடத்திய தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதையும் மீறி ரஷ்யா தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அலோப்போ நகரம் மீது ரஷ்யா போர் விமானங்கள் மூலம் நேற்று மீண்டும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது.
இதில் கட்டிடம் ஒன்று முழுமையாக சேதமடைந்ததில் பலர் உயிரிழந்தனர், இவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர்
அப்போது, உயிருக்கு போராடி கொண்டிருந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
மயக்க நிலையில் இருந்தவனுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டது, இதேபோன்று ரத்தம் சொட்ட சொட்ட சிறுமி ஒருத்தி தனது தந்தை தேடும் வீடியோ வெளியானது.
நேற்று நடந்த குண்டு வீச்சில் மட்டும் 25 பேர் அங்கு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.