அவன்ட்கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட 3 அமைச்சர்களையும் பதவி நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை:

294
அவன்ட் கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட மூன்று அமைச்சர்களையும் பதவிநீக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று அலரிமாளிகையில் நேற்று  கடும் அமளிதுளியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர், அமைச்சர்கள் திலக்மாரப்பன, விஜயதாச ராஜபக்ச மற்றும்உள்துறை அமைச்சர் வஜிரஅபயவர்த்தன ஆகியோரை பதவிநீக்குமாறு பல அமைச்சர்கள் பிரதமரை கோரியுள்ளனர்.
மூன்று அமைச்சர்களிற்கும் காட்டப்பட்ட எதிர்ப்பு காரணமாக பிரதமர் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டார்,பின்னர் அந்த கூட்டத்திலிருந்து வெளியேறினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சட்டம் ஓழுங்கு அமைச்சர் திலக்மாரப்பன தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்,தான் ஓரு அரசியல்வாதியாக பேசவில்லை, சட்டஅடிப்படையிலேயே பேசுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE