அவன்ட் கார்ட் குறித்து திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம்:-

314

அவன்ட் கார்ட் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுத கப்பல் தொடர்பில் இவ்வாறு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்துக்கு, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரட்ன போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

SHARE