
அவன்ட் கார்ட் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்திற்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவன்ட் கார்ட் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை தற்போதைக்கு ஊடகங்களுக்கு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆணைக்குழு புதிதாக காவல்துறை உத்தியோகத்தர்களை உள்ளீர்த்துக் கொண்டதாகவும் அவர்கள் இன்றைய தினம் முதல் பணியாற்றுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.